வாக்கு சதவீதம்: என்.டி.ராமராவை முந்துவாரா விஜய்

இப்போது வரை பெரிதாக பேசப்பட்டு வரும் ஆந்திராவில் என்.டி.ராமராவ் செய்த சாதனையை முறியடித்து விஜய் புதிய வரலாறு படைக்க வாய்ப்பு உள்ளது.
வாக்கு சதவீதம்:  என்.டி.ராமராவை  முந்துவாரா விஜய்
Published on

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத திருப்பத்தை விஜய் ஏற்படுத்தியுள்ளார். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே பெரும் வெற்றியை நோக்கி சென்றுள்ளார். தனிப்பெரும் கட்சியாக தவெக முன்னிலை பெற்று வரும் நிலையில் வாக்கு சதவீதத்தில் ஆந்திராவின் மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகருமான என்.டி.ராமராவை பின்னுக்கு தள்ளுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி இந்திய அளவில் அரசியல் தலைவர்களாக மாறிய நடிகர்களில், முதல் தேர்தலிலேயே அதிக வாக்கு சதவீதம் பெற்ற தவெக தலைவர் விஜய். இப்போது வரை பெரிதாக பேசப்பட்டு வரும் ஆந்திராவில் என்.டி.ராமராவ் செய்த சாதனையை முறியடித்து விஜய் புதிய வரலாறு படைக்க வாய்ப்பு உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு;

முதல் தேர்தலில் வாக்குகள் எப்படி?: எம்.ஜி.ஆர். முதல்.. விஜய் வரை..

1.எம்.ஜி.ஆர். - 1977 - அ.தி.மு.க. - 33.52%

2.என்.டி.ராமராவ் - 1983 - தெலுங்கு தேசம் கட்சி - 46.30%.

3.விஜயகாந்த் - 2006 - தே.மு.தி.க. - 8.38%.

4.சிரஞ்சீவி - 2009- பிரஜா ராஜ்ஜியம் கட்சி - 16.38%.

5.பவன்கல்யாண் - 2019 - ஜனசேனா கட்சி - 5.53 %.

6.கமல்ஹாசன் - 2021 - மக்கள் நீதி மய்யம் - 2.62 %.

7.விஜய் - 2026 - தமிழக வெற்றிக் கழகம் - ?.

X

Daily Thanthi
www.dailythanthi.com