

சென்னை,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் 11 லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்களுக்கு செல்பேசியில் தேர்தல் நாளான ஏப்ரல் 23 அன்று நாம் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்வோம் என்ற வாசகங்கள் அடங்கிய வாட்ஸ்அப் செய்தி அனுப்பப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் – 2026ஐ முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் 11 லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்களுக்கு செல்பேசியில் தேர்தல் நாளான ஏப்ரல் 23 அன்று நாம் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்வோம் என்ற வாசகங்களுடன் தேர்தல் தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ளும் வகையில் இணையதள முகவரியும் அடங்கிய வாட்ஸ்அப் செய்தி தமிழிலும் ஆங்கிலத்திலும் அனுப்பப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அன்பார்ந்த சென்னை வாக்காளப் பெருமக்களே!
வருகிற ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றப் தேர்தல் நாளன்று நாம் அனைவரும் 100% வாக்களிப்பதை உறுதி செய்வோம். தேர்தல் நடைபெறும் விடுமுறை நாளில் நாம் அனைவரும் வாக்குச்சாவடிக்கு தவறாமல் சென்று வாக்களித்து நமது உரிமையினை நிலைநாட்டிடுவோம்! வாக்காளர் என்பதில் பெருமிதம் கொள்வோம்! கூடுதல் விவரங்களுக்கு https://www.elections.tn.gov.in/
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.