சென்னையில் மேலும் 3 நாட்களுக்கு வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்

நவம்பர் 29ஆம் தேதி மற்றும் டிசம்பர் 5, 6 ஆகிய 3நாட்களில் வாக்காளர் சிறப்பு முகாம்கள் மீண்டும் நடைபெற உள்ளன.
சென்னையில் மேலும் 3 நாட்களுக்கு வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்
Published on: 

சென்னை

சென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம் ஏற்கனவே 2 நாட்கள் நடைபெற்ற நிலை யில" பொதுமக்களின்நலன் கருதி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறி வித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவுறுத்தல்படி கடந்த 12ம் தேதி வரைவு வாக்காளர் சுருக்கத்திருத்தப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்த்தல்', நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 தொகுதி களில் உள்ள 4. 071 வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்றன.

இந்த 2 நாட்கள் நடை பெற்ற முகாம்களில் மொத்தம் 8, 502 பேர் பங்கேற்றனர். அவர்களில் 5, 156 பேர் முதல்முறைவாக்காளர்களாகப் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், நவம்பர் 29ஆம் தேதி மற்றும் டிசம்பர் 5, 6 ஆகிய 3நாட்களில் வாக்காளர் சிறப்பு முகாம்கள் மீண்டும் நடைபெற உள்ளன. அந்த நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல", நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்டதிருத்தங்களை மேற்கொள்ளலாம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X