வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி தொடக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி தொடக்கம்
Published on

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 1-1-2024 -ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்குமுறை திருத்தம் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதனை தொடர்ந்து 5-1-2024 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. எனவே முன்திருத்த நடவடிக்கையாக குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களின் விவரங்களும் சரிபார்க்கப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. அதன் பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் பெயர் நீக்கம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு

இதில் முதல்கட்ட பணியாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி வருகிற 21.08.2023 வரை நடைபெறவுள்ளது. இத்திட்டத்தினை சிறப்பாக முடிக்கும் வகையில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து உரிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com