தி.மு.க. என்றும் வலிமையானது என்பதை உணர்த்தியுள்ள மதுராந்தகம் தொகுதி வாக்காளர்கள் - பரந்தாமன்

தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களிலிருந்து கழகத்தை எவராலும் பிரிக்கமுடியாது என்று பரந்தாமன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. என்றும் வலிமையானது என்பதை உணர்த்தியுள்ள மதுராந்தகம் தொகுதி வாக்காளர்கள் - பரந்தாமன்
Published on: 

சென்னை,

தி.மு.க. என்றும் வலிமையானது என்பதை உணர்த்தியுள்ள மதுராந்தகம் தொகுதி வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி என்று அக்கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் பரந்தாமன் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. என்றும் வலிமையானது

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குதிரை பேர த.வெ.க அரசால் மக்கள் மீது திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக போட்டியிட்ட எனக்கு 54 ஆயிரம் வாக்குகளை அளித்த மதுராந்தகம் வாக்களார்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தல் களத்தில் வெற்றியும் தோல்வியும் இயல்பானவை. அதுவும், திணிக்கப்பட்ட இடைத்தேர்தல் களத்தில், ஆளுங்கட்சியினரின் அனைத்து வகை அத்துமீறல்களையும், அதிகாரபலத்தையும், முதல்-அமைச்சர் விஜய் தெருத் தெருவாக வலம் வந்ததையும் மீறி, தி.மு.க என்ற பேரியக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து உதயசூரியனுக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குகள், தி.மு.க. என்றும் வலிமையானது என்பதை உணர்த்துகின்றன.

இரண்டாம் இடம்

பொதுத்தேர்தலில் பெற்ற மூன்றாம் இடத்திலிருந்து, இடைத்தேர்தலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி வந்திருப்பதன் மூலம், தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களிலிருந்து கழகத்தை எவராலும் பிரிக்கமுடியாது என்பது உறுதியாகியுள்ளது.

மதுராந்தகத்தில் கழக வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பினை எனக்கு வழங்கிய கழகத் தலைவர்-திராவிட நாயகர் அவர்களுக்கும், வழிநடத்திய கழகத்தின் இளம்தலைவர் -சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தல் களத்தில் கழகத்திற்காக பரப்புரையாற்றிய கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., மற்றும் தோழமைக்கட்சித் தலைவர்கள், தேர்தல் பணியினை ஒருங்கிணைத்துப்பணியாற்றிய திமுக சட்டமன்றக் கட்சி கொறடா எ.வ.வேலு, தேர்தல் பொறுப்பாளர்கள் த.மோ. அன்பரசன், க.சுந்தர் களத்தில் பாடுபட்ட முன்னாள் அமைச்சர்கள்,மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற முன்னாள், இன்னாள் உறுப்பினர்கள், ஒன்றிய-நகர-பேரூர்க் கழக நிர்வாகிகள், கிளைகழக நிர்வாகிகள் இளைஞரணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் நிர்வாகிகள், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் உடன்பிறப்புகள், தோழமைக் கட்சியினர், இளந்தலைமுறை திராவிட இயக்கத்தினர், தன்னார்வலர்கள் பொதுவாக நான் வெற்றிப்பெற வாழ்த்திய பொதுமக்கள்,பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com