வாக்குப்பதிவு விவரங்களை 2 மணிநேர இடைவெளியில் அறியலாம் - தேர்தல் கமிஷன் ஏற்பாடு

இசிஐநெட் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு விவரங்களை 2 மணிநேர இடைவெளியில் அறியலாம் - தேர்தல் கமிஷன் ஏற்பாடு
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் வரும் 23-ந் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு விவரங்களை அனைவரும் கண்டறியும் வசதியை தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதற்காக இசிஐநெட் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் 'வோட்டர் டர்ன் அவுட்' என்ற பிரிவில் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு முறை, வாக்களித்த மக்களின் எண்ணிக்கையை சதவீதம் அளவில் வெளியிட தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஒவ்வொரு தொகுதியிலும் நடக்கும் வாக்குப்பதிவு விவரங்களை இந்த செயலி மூலம் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை எளிதாக பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்.

இந்த தகவலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com