வாக்குப்பதிவு நேரம் முடிந்தது: வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் விநியோகம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 82.24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் 17-வது சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு இடைவேளையின்றி 11 மணி நேரம் நடைபெற்றது. வாக்குப்பதிவு நிலவரத்தை 2 மணி நேர இடைவெளியில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

காலை 9 மணி நிலவரப்படி, 17.69 சதவீத வாக்குகள் பதிவாகின. காலை 11 மணிக்கு 37.56 சதவீதம், பகல் 1 மணிக்கு 56.81 சதவீதம், பகல் 3 மணிக்கு 70 சதவீதம், மாலை 5 மணிக்கு 82.24 சதவீதம் என வாக்குகள் பதிவாகின.

இந்த நிலையில், மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தமிழகம் முழுவதும் பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வரிசையில் வந்து காத்திருந்ததால், அவர்களுக்கு டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டது. இதுவரை, எந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில், இந்தத் தேர்தலில் அதிகம் பேர் டோக்கன் வாங்கிக்கொண்டு வாக்கு செலுத்த காத்திருக்கின்றனர்.

இதுதொடர்பாக, திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான பிரதாப் கூறும்போது, "6 மணிக்குள் வாக்கு மையத்திற்குள் வரும் அனைவரும் வரிசையில் எவ்வளவு நேரம் காத்திருந்து வாக்களித்தாலும், இரவு 8 மணி, 9 மணி ஆனாலும் அதனை கடந்தும் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com