வி.பி.சிங்கின் அர்ப்பணிப்பு வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்: முதல்-அமைச்சர் விஜய்

வி.பி.சிங்கின் அர்ப்பணிப்பு வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
வி.பி.சிங்கின் அர்ப்பணிப்பு வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்: முதல்-அமைச்சர் விஜய்
Published on

சென்னை,

முன்னாள் இந்திய பிரதமர் வி.பி.சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

எளிமை, நேர்மை மற்றும் கொள்கைப் பற்றுடன் அரசியல் வாழ்வை முன்னெடுத்த முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் பிறந்தநாளில், அவருக்கு எனது சமூக நீதி வணக்கம். சமூக நீதிக்கான அவரது பங்களிப்பும், சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்கான அவரது அர்ப்பணிப்பும் இந்திய அரசியல் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com