விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி
Published on

விருத்தாசலம், 

புதுடெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் சார்பில் பிரதமர் நரேந்திர மோடியால் உழவர்களை கவுரவிக்கும் மாநாடு நடந்தது. இந்த நிகழ்வை கடலூர் மாவட்ட விவசாயிகள் காணொலி காட்சி மூலம் காண்பதற்காக விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக வேளாண்மை அறிவியல் நிலைய உழவியல் துறை, விதை நுட்பவியல் துறை, நூற்புழுவியல் துறை, பூச்சியில் துறை, தோட்டக்கலைதுறை மற்றும் நுண்ணுயிரியல் துறை ஆகிய துறைகளை சோந்த விஞ்ஞானிகள் உரையாற்றினார்கள். இதைத் தொடர்ந்து நடைபெற்ற தொழில்நுட்ப பயிற்சியை பேராசிரியர் மற்றும் தலைவர் தவபிரகாஷ் தொடங்கி வைத்து வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார். இணை பேராசிரியர் நடராஜன் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் நானோ யூரியா பயன்பாட்டின் முக்கியத்துவம் "ஒரே தேசம்" "ஒரே உரம்" உர நிறுவனத்தின் முக்கியத்துவத்தும், சொட்டு நீர் பாசனம், விசை தெளிப்பான், நுண்ணீர் பாசன வசதிகள், ஆளில்லா விமானம் மூலம் மண்ணில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அதற்கேற்றார் போல் உரப்பரிந்துரையை மேம்படுத்துதல், பலா, டிராகன் பழம் மற்றும் நறுமண பொருள், பூண்டு, மிளகு ஆகியவற்றின் ஏற்றுமதி வாய்ப்புகளை இணைய வழி வேளாண்மை முகமையின் வாயிலாக சந்தைப்படுத்துதல், இயற்கை எரிவாயு மற்றும் பண்ணை கழிவுகளிலிருந்து பெறப்படும் பயோ எத்தனால் உற்பத்தி செய்து தன்னிறைவு பெறுவது எப்படி, நிலக்கரி சுரங்களிலிருந்து பெறப்படும் கரித்துகள் மூலம் இயற்கை எரிவாயு தயாரித்தல், பருவநிலைக்கேற்ற பயிர் செய்யும் முறையை கையாளுதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். அனைத்து ஊராட்சியிலும் நுண்ணுயிர் மக்கும் உரம் தயாரிக்கும் முறை, வேஸ்ட் டிகம்போஸ்சர் மற்றும் உயிர் பயிர்வளர்ச்சி ஊக்கிகள் பயன்படுத்தி துரிதமாக வேளாண் கழிவுகளை மக்கவைப்பது குறித்து நுண்ணுயிரியல் உதவி பேராசிரியர் காயத்ரி செயல் விளக்கம் அளித்தார். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com