விஎஸ் பாபு இறுதி ஊர்வலம்: 2.3 கி.மீ தூரம் செருப்பு அணியாமல் நடந்து சென்ற விஜய்

விஎஸ் பாபு உடல் திருவிக நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
விஎஸ் பாபு இறுதி ஊர்வலம்: 2.3 கி.மீ தூரம் செருப்பு அணியாமல் நடந்து சென்ற விஜய்
Published on: 

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி தவெக எம்.எல்.ஏ விஎஸ் பாபு நேற்று காலமானார். மூச்சுத்திணறல் காரணமாக கடந்த செப்.9 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஎஸ் பாபு, 72 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்தார். எனினும், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலமானார். இதையடுத்து பெரம்பூரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்ட விஎஸ் பாபு உடலுக்கு முதல் அமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நேற்று முதல் இன்று பிற்பகல் வரை இறுதி அஞ்சலிக்காக விஎஸ் பாபு உடல் வைக்கப்பட்டு இருந்தது. இன்று மாலை 4 மணியளவில் விஎஸ் பாபு உடல், பெரம்பூரில் இருந்து திருவிக நகரில் உள்ள மின் மயானத்திற்கு எடுத்து வரப்பட்டது.

நடந்தே சென்ற விஜய்

முன்னதாக வி.எஸ்.பாபுவின் உடலை அவரது உறவினர்களோடு சேர்ந்து, முதல்-அமைச்சர் விஜய்யும் தனது தோளில் சுமந்து சென்றார். சுமார் 2.3 கி. மீட்டர் தொலைவு விஎஸ் பாபு இறுதி ஊர்வலத்தில் முதல் அமைச்சர் விஜய் நடந்தே சென்றார்.

வெற்றுக்காலுடன்

காலில் செருப்பு அணியாமல் வெற்றுக் காலுடன் முதல்-அமைச்சர் விஜய் நடந்து சென்றார். இறுதி ஊர்வலத்தின்போது விஎஸ் பாபுவின் மகனுக்கு ஆறுதல் கூறியபடியே விஜய் சென்றார். முதல்-அமைச்சர் விஜய்யும் மிகவும் சோகமாகக் காணப்பட்டார். அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் இறுதி ஊர்வலத்தில், விஎஸ் பாபு உடலை சுமந்து வந்த வாகனத்தின் பின்னால் நடந்து வந்தனர்.

முதல்-அமைச்சர் விஜய்யும் இறுதி ஊர்வலத்தில் முழுமையாக பங்கேற்று நடந்தே சென்றதால், வழிநெடுகிலும் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அமைச்சர்கள், தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்களும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று நடந்தே சென்றனர்.

X