வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

கடந்த 9-ம் தேதி அதிகாலை அவருக்கு திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
வி.எஸ்.பாபு
Published on

சென்னை,

சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு. இவர் தனது குடும்பத்துடன் கொளத்தூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த 9-ம் தேதி அதிகாலை அவருக்கு திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவரை குடும்பத்தினர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழு. உடனடியாக அவரை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து அவசர சிகிச்சைகளை தொடங்கினர்.

இந்த நிலையில் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தீவிர சிகிச்சை

அவருக்கு பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த டாக்டர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தற்போது வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com