

சென்னை,
கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். மாரடைப்பு காரணமாக இன்று பிற்பகல் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, வி.எஸ்.பாபு சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜினா விரைந்தார். வி.எஸ்.பாபுவின் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது;
எங்கள் தலைவரின் நம்பிக்கையும், அன்பையும் பெற்றவர். எங்கள் குடும்பத்தில் மூத்த உறுப்பினர் அண்ணன் வி.எஸ்.பாபுவின் உயிர் பிரிந்தது. தவெகவின் கடினமான காலகட்டங்களில் எங்களுடனும், தலைவருடனும் சேர்ந்து பணியாற்றியவர். குறிப்பாக வட சென்னையின் முகமாக இருந்தவர்.
வடசென்னையின் மொழியை பேசக்கூடியவர். கடினமான காலகட்டத்திலும் சிரித்த முகத்துடனே இருப்பார். கொளத்தூர், பெரம்பூர், வெல்லிவாக்கம் தொகுதியில் மக்கள் விரும்பக்கூடியராக அண்னன் இருந்தார். அவரது இழப்பு, ஒரு குடும்ப இழப்பு அல்ல.. ஒரு கட்சி இழப்பு அல்ல, ஒட்டுமொத்த வட சென்னையின் முக்கிய இழப்பு.”
இவ்வாறு அவர் பேசினார்.