போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை ஆக.3-ந் தேதி நடைபெறும் - தமிழக அரசு

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தின் 6-ம் கட்ட பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை ஆக.3-ந் தேதி நடைபெறும் - தமிழக அரசு
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த 6-ம் கட்ட பேச்சுவார்த்தை, சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெற உள்ளது.

முன்னதாக நடைபெற்ற 5 கட்ட பேச்சுவார்த்தையில் முழு உடன்பாடு எட்டப்படவில்லை. ஊதிய ஒப்பந்தத்தை ஆகஸ்ட் 3-ந் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்த்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், 6-ம் கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 66 தொழிற்சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர்.

கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதன்படி ஒரு தொழிற்சங்கத்திற்கு ஒருவர் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com