சேலம் கோவில்களில் நடை அடைப்பு

சேலம் மாவட்டத்தில் சந்திர கிரகணத்தையொட்டி கோவில்களில் நடை அடைக்கப்பட்டது.
சேலம் கோவில்களில் நடை அடைப்பு
Published on

சந்திர கிரகணம்

பூமியின் நிழலில் நிலவு கடந்து செல்லும் போது அது சூரியனின் நேரடியான ஒளியைப் பெற இயலாது போய் விடுகிறது. இதனால் நிலவு ஒளி குன்றுவதையே சந்திர கிரகணம் என்கிறோம். சந்திர கிரகணத்தின் போது சூரியனின் எதிர்த்திசையில் நிலவு வருவதால் சந்திர கிரகணம் பவுர்ணமியின் போதுதான் தெரியும். நிலவு முழுமையாக பூமியின் முழுநிழல் பகுதியில் மறைவது முழு சந்திர கிரகணமாகும்.

இந்த நிலையில் சந்திரகிரகணம் நேற்று மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.19 வரையில் இருந்தது. இதையொட்டி தமிழகத்தில் பெரும்பாலான கோவில்களில் நேற்று நடை அடைக்கப்பட்டது. அதன்படி சேலத்தில் பிரசித்திப்பெற்ற சுகவனேசுவரர் கோவிலில் மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்பட்டது. முன்னதாக காலையில் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

பரிகார பூஜை

இதேபோல் சேலம் கோட்டை பெருமாள் கோவில், ராஜகணபதி கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் மதியம் நடைஅடைக்கப்பட்டது.

இதேபோல் மாவட்டத்தில் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள பல கோவில்களிலும் காலையில் பூஜை முடிந்தவுடன் மதியம் 12 மணி அளவில் நடை அடைக்கப்பட்டது. பின்னர் சந்திர கிரகண நிகழ்வு முடிந்த பிறகு இரவில் மீண்டும் கோவில்கள் திறக்கப்பட்டு தண்ணீரை ஊற்றி சுத்தப்படுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து சாமிக்கு பரிகார பூஜை செய்யப்பட்டது.

இன்று (புதன்கிழமை) காலை முதல் கோவில்கள் வழக்கம்போல் திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com