தமிழறிஞர் சீகன்பால்குவுக்கு நினைவு மண்டபம் அமைக்கக் கோ நடை பயணம்

தரங்கம்பாடியில் தமிழறிஞர் சீகன்பால்குவுக்கு நினைவு மண்டபம் அமைக்கக் கோ நடை பயணம் நடந்தது.
தமிழறிஞர் சீகன்பால்குவுக்கு நினைவு மண்டபம் அமைக்கக் கோ நடை பயணம்
Published on

பொறையாறு;

தமிழை முதன்முதலில் ஓலைச்சுவடியிலிருந்து காகிதத்தில் அச்சேற்றி புதிய ஏற்பாடு பைபிள் வேத நூலை தமிழில் வெளியிட்ட தமிழறிஞர் பார்த்தலேமியு சீகன்பால்கு. இவருக்கு தரங்கம்பாடியில் தமிழ்நாடு அரசு சார்பில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும், மயிலாடுதுறை-தரங்கம்பாடி இடையே ஓடிய ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் அனைத்திந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சார்பில் பிரார்த்தனை நடைபயணம் நடைபெற்றது. நடைபயணத்தில் சென்னை, தஞ்சாவூர், காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த திரளான கிறிஸ்தவ திருச்சபைகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். தரங்கம்பாடி ஜெபமாலை அன்னை கத்தோலிக்க திருச்சபை ஆலய வளாகத்திலிருந்து தொடங்கிய நடைபயணத்துக்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் பிஷப் என்.ஜேக்கப் செல்வம், மாவட்ட செயலாளர் பிஷப் எட்வின் வில்லியம் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டமைப்பின் தலைவர் பிஷப் மோகன்தாஸ் நடைபயணத்தை தொடங்கி வைத்தார். நடைபயணம் மெயின்ரோடு, தரங்கம்பாடி நுழைவு வாயில், ராஜவீதி வழியாக சீகன்பால்கு சிலையை அடைந்தது. தொடர்ந்து நடைபயண குழுவினர் சீகன்பால்கு வந்து இறங்கிய நினைவிடத்தில் கைகளை கோர்த்தவாறு மணிப்பூர் மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டி பிராத்தனை செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com