

உலகின் 2-வது மிக நீளமான கடற்கரையாக சென்னை மெரினா உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். சென்னைவாசிகள் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் சென்னை மெரினா கடற்கரைக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து கடலின் அழகை ரசித்து செல்கிறார்கள்.
சென்னை மெரினா கடற்கரையை மாற்றுத்திறனாளிகளும் கண்டு ரசிக்க ஏதுவாக நடைபாதை அமைக்கப்பட்டிருந்தது இந்த நடைபாதை பழுதடைந்ததை தொடர்ந்து, அதற்கு பதிலாக ரூ.4.39 கோடி மதிப்பீட்டில் புதிய நடைபாதை அமைக்க சென்னை மாநகராட்சி டெண்டர் கோரப்பட்டுள்ளது.
முன்னதாக அமைக்கப்பட்ட நடைபாதை பயன்பாட்டினால் சேதமடைந்ததால் வலுவான மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பாதை வடிவமைக்கப்பட உள்ளது. இந்த ஒப்பந்தம் கோரப்பட்டதில் இருந்து 3 மாதங்களுக்குள் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.