

சென்னை,
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி வந்த அமெரிக்கா, நேற்று அந்த நாட்டின் மீது அதிரடியாக தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேலும் அமெரிக்காவும் சேர்ந்து ஈரானின் முக்கிய பகுதிகள் மீது குண்டு மழை பொழிந்தன. அதற்கு ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியது. இதனால் வளைகுடா நாடுகள் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டுள்ளார். காமேனி கொல்லப்பட்டதை ஈரானும் உறுதி செய்துள்ளது. ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது. அதோபோல ஒருவாரத்திற்கு பொதுவிடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் போர் மூண்டுள்ளதால் அங்கு வசித்து வரும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் காரணமாக தமிழர்களின் அவசர உதவிக்காக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்கள்:- 011-24193300 (Land line) 92895 16712 (Mobile Number with Whatsapp)
அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்கள்:-
இந்தியாவிற்குள் – 1800 309 3793
வெளிநாடு – +91 80 6900 9900 (Missed Call) தொடர்புக்கு – +91 80 6900 9901