ஊராட்சி அலுவலகம் முன்பாக வார்டு உறுப்பினர்கள் தர்ணா

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஊராட்சி அலுவலகம் முன்பாக வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சி அலுவலகம் முன்பாக வார்டு உறுப்பினர்கள் தர்ணா
Published on

பாப்பிரெட்டிப்பட்டி:-

திப்பிரெட்டிஹள்ளி ஊராட்சியில் பணிகள் நடைபெறாமல் முறைகேடு நடப்பதாக வார்டு உறுப்பினர்கள் புகார் கூறினர். மேலும் கிராம சபை கூட்டங்களிலும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதற்கிடையே முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வார்டு உறுப்பினர்கள் திருப்தி அடையவில்லை.

இந்தநிலையில் முறைகேடு தொடர்பாக முறையான விசாரணை நடத்தக்கோரி வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com