போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
Published on

 திருத்துறைப்பூண்டி;

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கள்ளிக்குடி வடக்குத்தெருவை சேர்ந்தவர் அஞ்சம்மாள்(வயது80). இவர் கடந்த 2015-ம் ஆண்டு விபத்தில் உயிரிழந்தார். இது குறித்து எடையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதன்பின் அவர் ஈரோடு மாவட்டத்துக்கு பணியிட மாற்றலாகி சென்று விட்டார். இன்ஸ்பெக்டர் முருகனுக்கு திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் இருந்து பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் விபத்து வழக்கில் ஆஜராகவில்லை. இதனால் கடந்த 7 வருடங்களாக இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த திருத்துறைப்பூண்டி குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி அருண், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர் முருகனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com