ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை - கமிஷனர் விஜயகுமாரி எச்சரிக்கை

ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி எச்சரிக்கை
ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை - கமிஷனர் விஜயகுமாரி எச்சரிக்கை
Published on

சேலம் 

சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சேலம் மாநகரில் விபத்தை குறைக்கும் வகையில் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரிகள் செல்லும் மாணவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தை ஓட்ட கூடாது. இதை மீறினால் அந்த மாணவர்கள் மீதும், அவர்களின் பெற்றோர்கள் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல், 3 பேர் அமர்ந்து சென்றாலோ அல்லது நான்கு சக்கர வாகனத்தில் சீட்பெல்ட் அணியாமல், செல்போன் பேசிக்கொண்டு சென்றாலோ, ஒருவழி பாதையில் எதிர்திசையில் சென்றாலோ மற்றும் போக்குவரத்து விதிகள் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com