சென்னை உள்ளிட்ட 3 துறைமுகங்களில் 5-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை உள்ளிட்ட 3 துறைமுகங்களில் 5-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
Published on: 

சென்னை,

வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், அதன் தாக்கம் காரணமாக சென்னை உள்ளிட்ட 3 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

எச்சரிக்கை கூண்டு

இதன்படி, சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் துறைமுகத்தின் இடதுபுறமாக கரையை கடக்கும்போது இந்த எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுவது வழக்கம்.

முரசு புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், வட தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், கடல் சீற்றத்துடன் காணப்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, கடலில் ஏற்கனவே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயலின் நகர்வு மற்றும் அதன் தாக்கத்தைத் தொடர்ந்து வானிலை ஆய்வு மையமும், துறைமுக நிர்வாகங்களும் கண்காணித்து வருகின்றன. புயல் எச்சரிக்கையை முன்னிட்டு துறைமுகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

X