எச்சரிக்கை பலகைகள்

திருக்காட்டுப்பள்ளி-கல்லணை சாலையில் தமிழ், ஆங்கிலத்தில் எச்சரிக்க பலகைகள் வைக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எச்சரிக்கை பலகைகள்
Published on

திருக்காட்டுப்பள்ளி-கல்லணை சாலையில் தமிழ், ஆங்கிலத்தில் எச்சரிக்க பலகைகள் வைக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலை அகலப்படுத்தும் பணி

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் மாநில சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. கல்லணை திருவையாறு சாலை கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வரை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிவடைந்த சாலைகளில் வெள்ளைக்கோடுகள், சாலை ஓரங்களில் மிளிரும் எச்சரிக்கை பலகைகள், பிரதிபலிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சாலை அருகில் பள்ளிகள் வேகத்தடைகள் உள்ளதை குறிக்கும் ஓவிய பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் வரவேற்புக்குரியவை. அதே சமயத்தில் சாலையின் இருபுறமும் ஆங்காங்கே நான்கு சக்கர, இரண்டு சக்கர வாகன டிரைவர்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போர்டுகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பச்சை நிறத்தில் வைத்து உள்ளனர்.

ஆங்கிலத்தில் எச்சரிக்கை பலகை

இதில் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை வாசகங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. தமிழ் நாட்டில் மாநில நெடுஞ்சாலையில் ஆங்கில வாசகங்கள் மட்டுமே உள்ள விழிப்புணர்வு போர்டுகளை கண்ட தமிழ் ஆர்வலர்கள் வேதனை படுகின்றனர்.

தமிழ்நாட்டில் பெரும்பாலும் தமிழ் தெரிந்த டிரைவர்களுக்கு புரியும் மொழியில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதலாம். பிற மாநில வாகன ஓட்டிகள் வருவதற்காக ஆங்கில மொழியில் வாசகங்கள் எழுதலாம். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலும் வாசகங்கள் அடங்கிய போர்டுகள் வைக்கலாம்.

தமிழ், ஆங்கிலத்தில் வைக்க வேண்டும்

தமிழை புறக்கணித்து ஆங்கில வாசகங்கள் அடங்கிய போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளது சரியானது தானா?. இது போன்ற மாநில சாலையில் உள்ள விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போர்டுகளை தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வைக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com