

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து 527 கன அடியாக உயர்ந்துள்ளது.
அணையின் மொத்த உயரமான 52 அடியில் 50 அடிக்கு நீர் மட்டம் எட்டியதால், பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர், அப்படியே திறந்துவிடப்படுவதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.