தி.மு.க ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சரியாக இருந்ததா? எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ஷாஜகான் கேள்வி

ஐந்து வருடமும் அமைதி பூங்காவாக இருந்தது போலவும் இந்த வருடம் தான் முதன்முறையாக கொலை நடந்தது போலவும் பேசுகிறார்கள் என்று ஷாஜஹான் சாடியுள்ளார்.
ஷாஜகான்
ஷாஜகான்
Published on: 

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் பகுதிக்கு வந்த சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; இந்த ஆறு மாத ஆட்சி என்பது மக்கள் எதை விரும்பி மாற்றத்தை விரும்பி வாக்களித்தார்களோ அதை நிறைவேற்றக்கூடிய வகையிலே மிக சிறப்பான ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது. வரலாற்றிலே முதன்முறையாக லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சி என்று பிரகடனம் செய்யப்பட்டு அதை பின்பற்றப்படுகிறது.

நிச்சயமாக வழங்குவோம்

கல்விக்கு உதவித்தொகை வழங்குவதிலே இந்த சமூக நீதித் துறையின் சார்பில் மட்டுமில்லை. சிறுபான்மை நலத்துறையின் சார்பிலும் நிதி வழங்கப்படுகிறது. விண்ணப்பித்த அனைவருக்கும் அதற்கான தொகை வழங்கப்படும். கடந்த வருடம் சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த 10 நபர்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்த வருடம் அதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு பல விண்ணப்பங்கள் நீட்டிப்பு செய்த பிறகும் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் 15, 16 விண்ணப்பங்கள் தான். அது தகுதி படைத்த விண்ணப்பங்கள் ஏழு விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்ட காரணத்தால் மீண்டும் அதற்கான தேதியை தள்ளி வைத்திருக்கிறோம். ஆகவே வெளிநாடு சென்று பயிலக்கூடிய மாணவர்களுக்கு அவருடைய விண்ணப்பம் சரியாக இருக்கும்போது அவருக்கான உதவி நிச்சயமாக இந்த அரசு வழங்கும்”என்றார்.

நியாயப்படுத்தவில்லை

தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் முன்வைப்பது குறித்த கேள்விக்கு அமைச்சர் ஷாஜஹான் கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டு திமுக ஆட்சியில சட்டம் ஒழுங்கு ஏதோ சரியாக பராமரிக்கப்பட்டது போலவும் அது குறித்து எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின், கனிமொழி போன்றவர்கள் இந்த அரசின் மீது குற்றம் சுமத்தக்கூடிய வகையில் பேசுகிறார்கள். ஆனால் கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் 9,000 கொலைகள் நடைபெற்றன. அதற்காக நான் கொலை நடப்பதை நியாயப்படுத்தி பேசவில்லை.

விலைவாசி உயர்வு ஏன்?

ஆனால், ஐந்து வருடமும் அமைதி பூங்காவாக இருந்தது போலவும் இந்த வருடம் தான் முதன்முறையாக கொலை நடந்தது போலவும் பேசுவது அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சி. எம்எல்ஏக்கள் மீது சமூக வலைத்தளங்கள்ல தினம்தோறும் பல வகையான செய்தி தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதன் மீது உறுதியான குற்றச்சாட்டு கொடுக்கப்பட்டு புகார் அளிக்கப்பட்டால் அந்த புகாரில் உண்மை இருக்கும் என்றால் முதலமைச்சர் உறுதியான நடவடிக்கையை எடுப்பார்கள். சூப்பர் எல் நினோவால் தான் விலைவாசி ஏறியுள்ளது . உலக நாடுகளிலும் பிற மாநிலங்களிலும் இந்த விலைஏற்றம் உள்ளது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை அதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையிலே முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்து கொண்டிருக்கிறார்” என்றார்.

X