சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
Published on

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் அருகே குட்லாடம்பட்டி ஊராட்சி மலையம்பாளையம் பகுதியில் மல்லூர் செல்லும் சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு சாலையோரங்களில் குப்பை கழிவுகள், இறைச்சி கழிவுகள், தேங்காய், நொங்கு மட்டைகள், பிளாஸ்டிக் கேரி பேக்குகள் உள்ளிட்ட பல்வேறு குப்பைகளை கொட்டுகின்றனர்.

இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மாலை நேரங்களில் குடியிருப்புகளில் கொசு தெல்லை அதிகளவில் உள்ளன. இதனால் அந்த வழியாக மல்லூர் மற்றும் சேலம் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்கின்றனர். எனவே சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் சாலையோர கழிவுகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com