7 வீடுகளில் தண்ணீர் புகுந்தது

ஜேடர்பாளையம் பகுதியில் 7 வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
7 வீடுகளில் தண்ணீர் புகுந்தது
Published on

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜேடர்பாளையம் அருகே உள்ள சோழசிராமணி, அரசம்பாளையம் குடித்தெரு ஆகிய பகுதிகளில் 7 வீடுகளில் தண்ணீர் புகுந்தது. அவர்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு தேவையான உணவு அரிசி ஆகியவற்றை வருவாய் துறையினர் வழங்கினர். மேலும்காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் கரையோரபகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், தாசில்தார் சிவக்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் அறிவுறுத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com