விவசாயத்திற்கு வைகை தண்ணீர்

முதுகுளத்தூர் தொகுதிக்கு விவசாயத்திற்கு வைகை தண்ணீரை கொண்டுவர அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்.
விவசாயத்திற்கு வைகை தண்ணீர்
Published on

சாயல்குடி, 

முதுகுளத்தூர் தொகுதிக்கு விவசாயத்திற்கு வைகை தண்ணீரை கொண்டுவர அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்.

நெல் விவசாயம்

முதுகுளத்தூர் தொகுதியில் கடந்த ஆண்டு கடலாடி தாலுகாவில் 10 ஆயிரத்து 370 எக்டர் நெல் விவசாயமும் முதுகுளத்தூர் தாலுகாவில் 18,100 எக்டர், கமுதி தாலுகாவில் 19,700 எக்டர் நெல் விவசாயம் செய்யப்பட்டது. முதுகுளத்தூர் தொகுதியில் கடலாடி, முதுகுளத்தூர், கமுதி பகுதியில் உள்ள விவசாயிகள் மழையை மட்டுமே நம்பி ஒரு போக விவசாயம் செய்தனர்.

நெல் விளைச்சல் இல்லை என்றால் இந்தபகுதியில் ஆடு மாடுகளுக்கு தீவனம் தட்டுப்படாகிவிடும். அந்த கால கட்டத்தில் ஆடு மாடுகளை விற்று வேறு இடங்களுக்கு விவசாயிகள் குடிபெயர்ந்து வந்தனர். விவசாயிகளின் 50 ஆண்டுகால கனவை நினைவாக்கும் வகையில் கடந்த ஆண்டு முதுகுளத்தூர் தொகுதி வைகை தண்ணீரை கொண்டுவர அமைச்சர் ராஜகண்ணப்பன் நடவடிக்கை மேற்கொண்டார்.

இதையடுத்து வைகை ஆற்றில் இருந்து பார்த்திபனூர் மதகு அணை வழியாக பரளை ஆற்றிற்கு வந்த தண்ணீர் காட்டு எமனேசுவரம், செய்யா மங்கலம், பெரிய ஆனைக் குளம், மணலூர், தூவல், ஆனைசேரி, நல்லூர், சிறுநனேந்தல், மேல கன்னிசேரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கண்மாய்களில் நிரம்பியது. விவசாயம் செழிப்படைந்தது.

உபரி நீர்

இதேபோன்று அமைச்சரின் முயற்சியால் தற்போது ராமநாதபுரம் பகுதிக்கு வைகையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு தற்போது முதுகுளத்தூர் பகுதிக்கு வந்துள்ளது. இதையடுத்து விவசாயிகள் விவசாய பணி மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர்.

மேலும் கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் வைகையில் இருந்து வரும் உபரி நீரை முதுகுளத்தூர் தொகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு கால்வாய்கள் மூலம் கொண்டு வருவதற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அகற்றம்

விவசாயிகள் தற்போது நிலங்களில் இருந்த காட்டு கருவேல மரங்களை அகற்றி அதிக இடங்களை விவசாய நிலமாக மாற்றி உள்ளனர். முதுகுளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் ஆகிய பகுதிகள் முழுவதிலும் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வைகையில் இருந்து வரும் உபரி நீரை விவசாயிகளின் பாசனத்திற்காக கொண்டுவர நடவடிக்கை எடுத்த அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு விவசாயிகள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com