நீர்நிலை ஆக்கிரமிப்பு - சென்னை ஐகோர்ட்டு கண்டனம்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், அரசு அதிகாரிகள் முறையாக செயல்படுவதில்லை என்று சென்னை ஐகோர்ட்டு குற்றம் சாட்டியது.
நீர்நிலை ஆக்கிரமிப்பு - சென்னை ஐகோர்ட்டு கண்டனம்
Published on

சென்னை,

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நீர்நிலையில் கட்டிய வீட்டை காலி செய்யக் கோரி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தவை எதிர்த்தும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும் செல்வி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீர்நிலைகளை ஆக்கிரமித்து வசிப்பதை அங்கீகரிக்க முடியாது என தெரிவித்தனர். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், அரசு அதிகாரிகள் முறையாக செயல்படுவதில்லை என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கட்டடங்களை அகற்றாத அதிகாரிகளின் செயலை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.  

X

Daily Thanthi
www.dailythanthi.com