நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்

கோவை மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பருவமழை முன்எச்சரிக்கை கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டார்.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்
Published on

கோவை


கோவை மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பருவமழை முன்எச்சரிக்கை கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டார்.

32 அதிகாரிகளுக்கு கேடயம்

வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத் தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, பொள்ளாச்சி துணை கலெக்டர் பிரியங்கா, மாநகராட்சி துணை ஆணையாளர் செல்வசுரபி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய துணை கலெக்டர்கள், வருவாய் கோட் டாட்சியர்கள் உள்பட 32 அதிகாரிகளை பாராட்டி கலெக்டர் கேடயம் வழங்கினார். கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:-

அவசர உதவி மையம்

பருவமழை தொடங்க உள்ள நிலையில் 24 மணிநேரமும் செயல் படும் அவசர உதவி சேவை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இங்கு பெறப்படும் தகவல்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும். நீர்நிலைகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனடி யாக அகற்ற வேண்டும். வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் பொது மக்கள் தங்குவதற்கு திருமண மண்டபங்கள், சமூக கூடங்கள், பள்ளிகள் தயார் நிலையில் வைக்க வேண்டும்.

பருவமழை முன் எச்சரிக்கை தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வெள்ள பாதிப்பு பகுதிகளை கண்டறிவதுடன், புதிய பாதிப்பு பகுதிகள் இருந்தால் அதிலும் கவனம் செலுத்த வேண்டும். மண்டல குழுக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். மணல் மூட்டைகளை தயார்படுத்த வேண்டும்.

ஆற்றோர பகுதி மக்கள்

வெள்ளக்காலங்களில் நொய்யல் ஆறு, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு தகுந்த முன் எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட வேண்டும். மருத்துவம னைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வழிவகை செய்ய வேண்டும்.

உயிர் காக்கும் மருந்துகள் எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். தொற்றுநோய் பரவல் தடுப்பு குழுக்கள் ஏற்படுத்த வேண்டும். வெள்ளக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள பாலங்களில் பொதுமக்கள் பாதுகாப்புடன் கடந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com