பொதுமக்களுக்கு மாற்று இடங்கள் வழங்கிய பின்னரே நீர்நிலை ஆக்கிரமிப்பு இடங்களை அகற்ற வேண்டும் - விஜயகாந்த்

பொதுமக்களுக்கு மாற்று இடங்கள் வழங்கிய பின்னரே, நீர்நிலை ஆக்கிரமிப்பு இடங்களை அகற்ற வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
பொதுமக்களுக்கு மாற்று இடங்கள் வழங்கிய பின்னரே நீர்நிலை ஆக்கிரமிப்பு இடங்களை அகற்ற வேண்டும் - விஜயகாந்த்
Published on

சென்னை,

இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறுகையில்,

தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கடைகளை அகற்றுவதை வரவேற்கிறேன். அதேசமயம் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றுவதற்குக் முன்பு, அங்கு வசிக்கும் மக்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். அவர்களுக்கான மாற்று இடத்தையும் ஏற்படுத்தி தரவேண்டியது தமிழக அரசின் கடமை.

பொதுமக்களும் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதன் நீர்நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களை பாதுகாக்க முடியும். வரும் காலங்களில் நீர்நிலைகளில் வீடு கட்ட அரசு அனுமதிக்க கூடாது .

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com