ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக சரிவு

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக சரிவு
Published on

தர்மபுரி,

தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த கனமழையின் காரணமாக கர்நாடக அணைகளான கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அந்த அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையை வந்தடைந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.

இந்த நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நேற்று வரை வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.

இருப்பினும் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளதால், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், இரு அணைகளில் இருந்து மீண்டும் நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அடுத்த 2 நாட்களில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com