ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14,500 கன அடியாக உயர்வு

மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
ஒகேனக்கல்
Published on

ஒகேனக்கல்,

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14,500 கன அடியாக உயர்ந்துள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

தமிழக-கர்நாடக எல்லைப் பகுதிகள் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 6,500 கன அடியிலிருந்து திடீரென 14,500 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 86.78 அடியாக சரிந்துள்ள நிலையில், டெல்டா பாசனத்திற்காக 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இந்த நீர்வரத்து அதிகரிப்பால், தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com