ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
 ஒகேனக்கல்
Published on

பென்னாகரம்,

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப் படும் தண்ணீரின் அளவை பொறுத்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதும் வழக்கம். நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

காவிரி ஆறு

இந்த நீர்வரத்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இருப்பினும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

இதனால் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ், உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

நீர்வரத்து

இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதனிடையே கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரத்து 174 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது.

இதையடுத்து நேற்று மாலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக மீண்டும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com