வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர்

வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.
வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர்
Published on

கோடை வெயில் காலம் தற்போது தொடங்கி விட்டது. இந்த காலத்தில் போக்குவரத்து போலீசார் நடுரோட்டில் வெயிலில் நின்று தான் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியை மேற்கொள்வர். அந்த வெயிலால் அவர்கள் உடல்நிலை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை போக்குவரத்து போலீசாருக்கு காலை, மாலை என இரு வேளையும் நீர்மோர் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி பெரம்பலூர் நகர போக்குவரத்து போலீசாருக்கும், நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசாருக்கும் நீர்மோர் வழங்கும் திட்டம் நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இதன் தொடக்க விழா பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நேற்று மதியம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி தலைமை தாங்கி போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர் வழங்கினார். இதில் பெரம்பலூர் நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதுமதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்ரமணியன், வரதராஜன் மற்றும் போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com