குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்... சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்


குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்... சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
x
தினத்தந்தி 3 Aug 2025 10:33 AM IST (Updated: 3 Aug 2025 10:36 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

தென்காசி,

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், புலிஅருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குவிந்து ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.

மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். வெளியூர்களில் இருந்து வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலரும் பழைய குற்றாலம் முதல் மெயின் அருவி வரை செல்லும் பகுதியில் அமைந்துள்ள தனியார் தோட்ட மர நிழல்களில் உணவுகள் சமைத்து, அருவிகளில் குளித்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையால் அருவிக்கரைகளை ஒட்டி உள்ள கடைகளிலும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேரம் செல்ல செல்ல சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story