திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
x

குமரி குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்புக்கு வருவது வழக்கம். தற்போது, மலையோர பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவியில் முதல் இரண்டு பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

இந்நிலையில், வார விடுமுறையை முன்னிட்டு திற்பரப்பு அருவிக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தாருடன் இன்று காலை முதலே அதிகளவில் திற்பரப்பு அருவிக்கு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்துநின்று அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து உற்சாகமாக குளியலிட்டும். அருவியின் அழகை ரசித்து செல்கின்றனர்.

மேலும், சிறுவர்கள் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்து நீண்ட நேரம் விளையாடி செல்கின்றனர். வார விடுமுறை என்பதால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. இதனால், அசம்பாவிதங்களை தவிர்க்க மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

1 More update

Next Story