வரவிருக்கும் சம்பா சாகுபடிக்காவது உடனடியாகத் தண்ணீர் வந்தாக வேண்டும்! - மாணிக்கம் தாகூர்

கர்நாடக மந்திரி பேசுவது மாநிலங்களுக்கு இடையே விரிசலை மட்டுமே உண்டாக்கும் என மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் சம்பா சாகுபடிக்காவது உடனடியாகத் தண்ணீர் வந்தாக வேண்டும்! - மாணிக்கம் தாகூர்
Published on

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

விரிசலை உருவாக்கும்

தமிழ்நாட்டின் குறுவை விவசாயம் ஏற்கனவே காய்ந்துவிட்டது, வரவிருக்கும் சம்பா சாகுபடிக்காவது உடனடியாகத் தண்ணீர் வந்தாக வேண்டும்!

CWRC அமைப்பின் உத்தரவை ஏற்க மறுத்து மேல்முறையீடு செய்வோம் என்றும், தண்ணீர் திறக்க முடியாது என்றும் கர்நாடக மந்திரி ராமலிங்க ரெட்டி பேசுவது தேவையற்ற பதற்றத்தையும் மாநிலங்களுக்கு இடையே விரிசலையும் மட்டுமே உண்டாக்கும். இத்தகைய பொறுப்பற்ற கருத்துக்களைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

தண்ணீர் திறக்க வேண்டும்

29.07.2026 முதல் 15 நாட்களுக்குப் பிலிகுண்டுலுவில் தினமும் 3,500 கன அடி நீரைத் திறக்க வேண்டும் என்ற CWRC உத்தரவைக் கர்நாடகா எவ்விதச் சாக்குப்போக்கும் இன்றி உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்!

26.07.2026 வரை பிலிகுண்டுலுவில் வழக்கமாக வரவேண்டிய 35.391 டிஎம்சி-க்கு பதிலாக வெறும் 3.543 டிஎம்சி (10.01%) மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு 9.46 டிஎம்சி நீர் பாக்கி உள்ள நிலையில், சட்டப்பூர்வ தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் மதித்து நடப்பதே கூட்டாட்சி தர்மத்திற்கு அழகு.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com