பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் திறப்பு

பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் திறப்பு
Published on

சென்னை,

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழையால் 4 மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய 5 ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. பூண்டி ஏரிக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது.

35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் மட்டம் 33.95 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, உபரி நீர் படிப்படியாக திறக்கப்பட உள்ளதாக ஏற்கெனவே பொதுப்பணித்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com