கோதையாறு அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

இதனால், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 17000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
கோதையாறு அணை
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் உத்தரவிற்கிணங்க கன்னியாகுமரி மாவட்டத்தில், கோதையாறு பாசன திட்டத்தின் கீழுள்ள ராதாபுரம் கால்வாய் பாசனத் தேவைக்காக 16.06.2026 முதல் 31.10.2026 வரை 138 நாட்களுக்கு வினாடிக்கு 150 கன அடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் I, சிற்றார் II அணைகளின் தண்ணீர் இருப்பை பொறுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

இதன் மூலம் ராதாபுரம் வட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் (கோதையாறு பாசனத்திட்ட ராதாபுரம் கால்வாய் பாசனப் பகுதிகள்) உள்ள 17000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com