மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 130 கனஅடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
Published on

மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த சில வாரங்களாக வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த நிலையில் பாசன பகுதியில் தண்ணீர் தேவை குறைந்தது என கருத்தில் கொண்டு நேற்று காலை முதல் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.

அதாவது வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்திற்கு தொடர்ந்து வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 130 கனஅடியாக குறைந்துள்ள நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 8 ஆயிரத்து 400 கன அடியாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் தினமும் குறைந்து கொண்டே வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 101.05 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com