நெல்லை மணிமுத்தாறு அணையில் நீர் திறப்பு: முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு

நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
நெல்லை மணிமுத்தாறு அணையில் நீர் திறப்பு: முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு
Published on: 

சென்னை,

பிசான பருவ சாகுபடிக்காக நவம்பர் 1-ம் தேதி முதல் நீர் திறக்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தில் இருந்து பெருங்கால் பாசனத்தில் உள்ள 2756.62 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்களுக்கு பிசான பருவ சாகுபடிக்கு 01.11.2026 முதல் 31.03.2027 முடிய 151 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து 417.74 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், ஜமீன் சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி வைராவிகுளம், தெற்கு பாப்பான்குளம், கீழ்முகம் மற்றும் தெற்கு கல்லிடைக்குறிச்சி கிராமங்களில் உள்ள 2756.62 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X