

சென்னை,
பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி பாசன அமைப்பில் உள்ள வடக்கு கோடைமேலழகியான் கால்வாய் தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய் மற்றும் கன்னடியன் கால்வாய் ஆகிய 4 கால்வாய்களின் கீழுள்ள 10265 ஏக்கர் நேரடி பாசனப்பரப்பு நிலங்களுக்கு, கார் பருவ சாகுபடிக்கு 01.06.2026 முதல் 02.10.2026 முடிய (124 நாட்கள்) 1710.83 மில்லியன் கன அடிக்கு மிகாமல், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்களிலுள்ள 10265 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.