பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இன்று முதல் தண்ணீர் திறப்பு

124 நாட்களுக்கு 1710.83 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மணிமுத்தாறு
Published on

நெல்லை,

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கார் பருவ சாகுபடி

தாமிரபரணி பாசன அமைப்பில் உள்ள வடக்கு கோடைமேல ழகியான் கால்வாய், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய் ஆகிய 4 கால் வாய்கள் உள்ளன.

இந்த கால்வாய் பாசனத்தில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 10 ஆயிரத்து 265 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடி பாசன வசதியை பெறுகின்றன. இங்கு தற்போது கார் பருவ சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தண்ணீர் திறப்பு

எனவே வழக்கம்போல் ஜூன் மாதத்தில் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவின் பேரில், நெல்லை மாவட்டத்தில் கார் பருவ சாகுபடிக்காக இன்று (திங்கட்கிழமை) முதல் 2.10.2026 வரை 124 நாட்களுக்கு 1710.83 மில்லியன் கன அடிக்கு மிகாமல்

பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் வடக்கு கோடைமேலழகியான் கால்வாய், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய் ஆகிய 4 கால்வாய்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு சென்றடைகின்றன. இந்த தகவல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com