சாத்தனூர் அணையிலிருந்து பாசனத்துகாக தண்ணீர் திறப்பு

சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்னீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
சாத்தனூர் அணையிலிருந்து பாசனத்துகாக தண்ணீர் திறப்பு
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்னீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு;

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையிலிருந்து 2026ம் ஆண்டிற்கு சாத்தனூர் இடது மற்றும் வலதுபுறக் கால்வாய்களின் பாசன நிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு முறையே 330 க.அடி / வினாடி மற்றும் 220 க.அடி / வினாடி, மொத்தம் 550 கனஅடி / வினாடி வீதம் 31.01.2026 முதல் 11.05.2026 வரை 100 நாட்களுக்கு தொடர்ச்சியாக 4752.00 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட்டும், திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு நிலங்களுக்கு உரிமை நீர் 1200.00 மில்லியன் கனஅடி (மொத்தம் 4752.00 + 1200.00 = 5952.00 மில்லியன் கனஅடி தண்ணீர் பாசனத்திற்கு தேவை) நீரினை நீர் பங்கீடு விதிகளின்படி பிப்ரவரி முதல் ஏப்ரல் 30-க்குள் விவசாயிகளின் கோரிக்கைப்படி தேவைப்படும்பொழுது மூன்று தவணைகளில் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் சாத்தனூர் அணை இடது மற்றும் வலதுபுறக் கால்வாய் பாசனப்பரப்பு 45,000 ஏக்கர் மற்றும் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பாசன பரப்பு 5000 ஏக்கர் பாசனவசதி பெறும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com