சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வருகிற 1-ந்தேதி நடைபெறுகிறது.
சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு
Published on

மதுரை,

மதுரையில் உலக புகழ்பெற்ற சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வருகிற 1-ந்தேதி நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து ஆற்றுப்படுகையில் தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம்.

அதன்படி வைகை அணையின் சிறிய மதகுகள் வழியாக நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. வினாடிக்கு 500 கனஅடி வீதம், வருகிற 29-ந்தேதி வரை 6 நாட்கள் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன்மூலம் மொத்தம் 170 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com