சென்னையில் முக்கிய இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

மெட்ரோ ரெயில் நிறுவன பணிக்காக குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
சென்னை,
சென்னையில் மெட்ரோ ரெயில் நிறுவன பணிக்காக (CMRL) குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை மற்றும் ஸ்டெர்லிங் சாலையில் பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணிகளை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொள்வதால் 29.03.2025 அன்று காலை 10.00 மணி முதல் 30.03.2025 அன்று காலை 10.00 மணி வரை, மண்டலம் 9, 10 மற்றும் 13க்குட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story






