தூத்துக்குடியில் 11ம்தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் ஜூன் 11ம்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.
தூத்துக்குடியில் 11ம்தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி கமிஷனர் தகவல்
Published on

தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாநகரின் குடிநீர் விநியோக பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிகளில் வரும் மின்சார பாதையான கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் வருகின்ற 11.6.2025 புதன்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com