

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் வழங்கும் வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மின்சாரம் வழங்கும் கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் இன்று (8.10.2026, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி மாநகர பகுதிகள் முழுவதும் குடிநீர் வினியோகம் இருக்காது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தேவையான குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.