

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் அரக்கோணம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் கிராம குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதார உறுப்பினர்களுக்கான களநீர் பரிசோதனை பயிற்சி முகாம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமில் ஊராட்சி செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், பம்ப் ஆபரேட்டர்கள், சுகாதர குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு எவ்வாறு நீர் பரிசோதனை செய்வது என செய்முறை விளக்கமும் மற்றும் தண்ணீரின் தரம், தண்ணீர் மூலம் பரவ கூடிய நோய்கள், நீர் மாசு ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.
மாவட்ட துணை நீர் பரிசோதனை ஆய்வாளர் (வேதியல்) ருத்ரா மற்றும் ஆய்வக உதவியாளர்கள் கலைவாணி, கலைசெல்வி ஆகியோர் செய்முறை விளக்கம் அளித்தனர். ஊராட்சிக்கு 5 பேர் வீதம் ஒரு நாளைக்கு 10 ஊராட்சிகளில் இருந்து 50 பேர் கலந்து கொள்கிறார்கள். 4 நாட்கள் பயிற்சிகள் நடைபெறும் என பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பிரதாப் தெரிவித்தார். முகாமில் கலந்து கொண்ட கிராம குடிநீர் மற்றும் சுகாதார குழு உறுப்பினர்களுக்கு களநீர் பரிசோதனை பயிற்சி கையேடு வழங்கப்பட்டது.