நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம்

திட்டச்சேரியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம்
Published on

திட்டச்சேரியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திட்டச்சேரி நகர செயலாளர் முகமது பாவா பகுருதீன் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ், மாநில மகளிர் அணி பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட மரைக்கான் சாவடியில் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து வாக்கு சாவடிகளிலும் முகவர்களை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நாகை மாவட்ட செயலாளர் ஆதித்தன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com